Skip to main content

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹரி காலமானார்

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

பரக

 

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர், பாடகர் பப்பி லஹரி (69) உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் இன்று காலமானார். மூச்சு திணறல் காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளி்ட்ட 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். 

 

இந்நிலையில், அவரின் மறைவு இசை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவரின் மறைவுக்கு திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களின் வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். சிலர் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் முன் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

"கலாச்சாரத்தை பாதுகாப்பதில் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்களிப்பு மிக அதிகம்" - சங்கர் மகாதேவன் புகழாரம்

 

shankar mahadevan speech rss event

 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1952 ஆம் ஆண்டு விஜய தசமி நாளில், தனது இயக்கத்தை தொடங்கிய நிலையில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பிரம்மாண்ட ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டு விஜயதசமி நாளான இன்று (24.10.2023) ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடந்தது. இந்த உத்சவ் நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மகாராஷ்ட்ர துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

மேலும் சிறப்பு விருந்தினராகப் பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், "நான் என்ன சொல்ல முடியும். உங்களுக்கு சல்யூட் மட்டுமே அடிக்க முடியும். அகண்ட பாரதம் என்ற நமது சித்தாந்தம், மரபுகள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ்-ன் பங்களிப்பு மற்றவர்களை விட மிக அதிகம். எங்கள் கலாச்சாரத்தை இசை மற்றும் பாடல்கள் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு கற்பிப்பதும் கடத்துவதும் எனது கடமை என்று நான் நம்புகிறேன். 

 

இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுடனான எனது உரையாடல்களிலும், எனது நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்படப் பாடல்களிலும் இதைச் செய்ய முயற்சிக்கிறேன். இந்த விழாவில் நான் சிறப்பு விருந்தினராக வரவேற்கப்பட்டதற்கு நான் மிகவும் பெருமையாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஒட்டுமொத்த சங்க பரிவாரங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். 

 

 

Next Story

பாடகர் டி.எம்.எஸ். சிலையை முதல்வர் திறந்து வைத்தார்

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

Singer T.M.S. Chief Minister inaugurated the statue

 

திரைத்துறையில் கிட்டத்தட்ட 10,100 பாடல்களுக்கு மேல் பாடி இன்றும் குரல் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மறைந்த பாடகர் டி.எம். சௌந்தரராஜன். 60 வருடங்களுக்கு மேலாகத் திரைத்துறையில் பயணித்த இவர் தமிழைத் தவிர சௌராஷ்டிரா, கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ளார். முதல் பாடலைத் தனது 24வது வயதில் பாடினார். கடைசிப் பாடலை 88வது வயதில் பாடினார். தனது 90வது வயதில் உடல்நலக்குறைவால் 2013 ஆம் ஆண்டு காலமானார்.

 

அவரை கௌரவிக்கும் வகையில் டி.எம். சௌந்தரராஜனின் 100வது பிறந்தநாளை ஒட்டி சென்னை மந்தைவெளியில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு ‘டி.எம். சௌந்தரராஜன் சாலை’ என்ற பெயரை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் 24  ஆம் தேதி  சூட்டிப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.

 

அதனைத் தொடர்ந்து அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி மதுரை முனிச்சாலை சந்திப்பில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் பொதுப்பணித்துறையின் மூலம் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முழு திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது சிலை அருகே அமைந்துள்ள சுற்று வேலிகளில் இசைக் கருவிகளின் படங்கள் இடம் பெற்றுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும் அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். முழு உருவச் சிலையைத் திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பாடகர் டி.எம். சௌந்தரராஜன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

 

Singer T.M.S. Chief Minister inaugurated the statue

 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க. பொன்முடி, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, மு.பெ. சாமிநாதன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பி. மூர்த்தி, மதுரை மாநகராட்சி மேயர் வி. இந்திராணி பொன் வசந்த், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம். பூமிநாதன், கோ. தளபதி, துணை மேயர் டி. நாகராஜன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த. மோகன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ். சங்கீதா, டி.எம். சௌந்தரரராஜன் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 


 

விரிவான அலசல் கட்டுரைகள்