Advertisment

ஆபாசமாக மெசேஜ் செய்த நபரால் அதிர்ச்சியில் பாடகி சின்மயி!

பாடகி சின்மயிக்கு சமூக வலைத்தளம் மூலம் ஆபாசமாக மெசேஜ் செய்த நபரால் கடும் அதிர்ச்சியாகி உள்ளார்.இதற்கு முன்பு மீ டூ மூலம் தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு பற்றி வெளிப்படையாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்த நிலையில் சமூக வலைத்தளம் மூலம் தனக்கு வந்த ஆபாச மெசேஜ்களை பதிவிட்டுள்ளார்.மேலும் அந்த நபர் பேசியுள்ளதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார்.

Advertisment

சின்மயியிடம் மோசமான ஆபாச வார்த்தைகளால் முகம் சுளிக்கும் வகையில் பேசியுள்ள அந்த நபரை பலரும் ட்விட்டரில் திட்டி தீர்த்து வருகின்றனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர். அதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

message youngsters metoo chinmayi singer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe