Skip to main content

கரோனோ பீதியில் தலைமறைவாக விடுதியில் பதுங்கி இருந்த சிங்கப்பூர் ரி்ட்டன் கைது!

Published on 29/03/2020 | Edited on 29/03/2020

தமிழகம் முழுவதும் கரோனோ பீதியில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் தான் இந்த வைரஸ் அதிகம் பரவி வருகிறது என்பதை உணர்ந்த அந்த அந்த மாநில நிர்வாகம் தன் மாநிலத்திற்குள் கடந்த 2 மாதங்களாக வெளிநாட்டிற்கு சென்று வந்தவர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களை தேடி கண்டுபிடித்து தனிமைப்படும் பணியில் வேகமாக செயல்படுத்தி வருகிறார்கள்.

 

Singapore returned person arrested for hiding behind lodge


சமீபத்தில் புதுக்கோட்டையை அடுத்த பனியம்பட்டி வடகாட்டை சேர்ந்த சக்தி கண்ணன் என்பவர் கடந்த மார்ச் 22ம் தேதி சிங்கபூரிலிருந்து திருச்சி வந்திருக்கிறார். ஆனால் வீடு திரும்ப வில்லை. விமானநிலையத்தில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் சக்திகண்ணனை தேடி புதுக்கோட்டை மாவட்ட சுகாதரா ஊழியர்கள் தேடி சென்ற போது வீட்டில் இல்லை என்பதை தெரிந்து கொண்டது அதிர்ச்சியடைந்தனர்.

சக்திகண்ணன் ஊர் திரும்பியதை அதிகாரிகள் மூலம் தெரிந்து கொண்ட பெற்றோர் அவரை தேட ஆரம்பித்து கடைசியில் தேடிக்கண்டுபிடித்து கொடுங்கள் என போலீசிடம் புகார் செய்திருக்கிறார்கள். இதனால் சக்திகணேசனை தேடும் படலம் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கண்டோன்மென்ட் போலீசார் வழக்கம் போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அப்போது ஒரு இளைஞன் சிவந்த கண்களுடன் தடுமாறியபடி நடந்து சென்று கொண்டு இருப்பதை பார்த்து தடுத்து விசாரித்த போது.. அவன் நான் மெடிக்கல் வந்தேன், மொபைல சார்ஜ் போடனும் என்று மாற்றி மாற்றி பேச சந்தேகம் அடைந்த போலீஸ் அவரை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது.

அவர்  மார்ச் 22ம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தாகவும், வீட்டிற்கு சொல்லாமல் திருச்சி ஜங்சன் – மத்திய பேருந்து நிலையம் சாலையில் உள்ள அபூர்வா விடுதியில் 503 எண் அறையில் தங்கி இருப்பதாவும் என்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்த தங்கியிருப்பதாக தகவல் சொல்லவும் அதிர்ச்சியடைந்த கண்டோன்மென்ட் போலீஸ் உடனே அவரை பிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சொல்லி அவனுடைய பெற்றோருக்கும் தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

இதற்கு இடையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு அனைத்து விடுதிகளும், ஓட்டல்கள் கட்டாயம் மூடி சொல்லி உத்தரவு இருக்கும் நிலையில் திருச்சி அபூர்வா விடுதி எப்படி நடத்திக்கொண்டிருக்கிறார்கள், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களை எப்படி தங்க வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து மாநகர போலீஸ் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.