Advertisment

சிங்கம்பட்டி ஜமீனுக்கு மத்திய அரசு கௌரவம்! ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி தபால் தலை வெளியீடு!

Singampatti zamin Murugadas theerthapathi

ஜமீன்களில் கடைசி ஜமீன்தார், நெல்லை மாவட்டத்தின் அம்பை அருகிலுள்ள சிங்கம்பட்டி சமஸ்தான ஜமீனின் முருகதாஸ் தீர்த்தபதி ராஜா. கடந்த மே 24 அன்று உடல் நலக் குறைவு காரணமாக காலமான ஜமீன்தார் வெகு ஜனரஞ்சகமானவர். கல்வி, ஆன்மீகம், அரசியல், இலக்கியச் சொற்பொழிவுகளில் தேர்ந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்தார். கல்விக்காக கடல் கடந்து இலங்கையின் கொழும்பு நகரில் படிப்பை மேற்கொண்ட இந்திய ஜமீனின் முதலாமவர் இவரே.

Advertisment

அதே போன்று ஜமீன் நிர்வாகம், விவசாய மக்களுக்கான வளர்ச்சிப் பணிகள், மராமத்து போன்ற பல்வேறு வகையான தனது மேம்பட்ட நிர்வாகத் திறனைப் பயன்படுத்தி ஜமீனைச் செழிப்பாக்கிய ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி, மேற்குத் தொடர்ச்சி மலையின் காரையாறு சொரிமுத்தைய்யனார் ஆலயத்தை விரிவுபடுத்தி ஆன்மீகத்தைச் சிறப்பாக்கிய அக்கோவில் பரம்பரை அறங்காவலரானவர்.

Advertisment

இது போன்று ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி ராஜாவின் பொதுச் சேவையைப் பாராட்டி அவருக்கு மத்திய அரசு அஞ்சல் தபால் தலை வெளியிட்டுள்ளது. ஜமீனுக்கான தகுந்த முதல் மரியாதையாகக் கருதப்படுவதாக அம்பை மற்றும் சிங்கம்பட்டி வட்டார மக்கள் மகிழ்வடைகின்றனர். இது போன்ற கௌரவம் வேறு ஜமீனுக்குக் கிடைத்ததாகத் தெரியவில்லையாம்.

Tirunelveli murugadas
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe