'Simple tasks should be provided' - DGP Tripathi orders

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன.இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில்இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், 55 வயதுள்ள காவலர்களுக்கு எளிய பணிகளை மட்டுமே வழங்க வேண்டும் என எஸ்.பி.களுக்கும், காவல் ஆணையர்களுக்கும்டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.