ஐ.பி.எல். போட்டிக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டமன்சூர் அலிக்கான் இதுவரைவிடுவிக்கப்படாததால், அதனை விசாரிக்க சென்னை ஆணையரை சந்தித்து பேச சென்றார் நடிகர்சிம்பு. அப்போது அவரது ரசிகர்களும் வர தொடங்கியதால், அந்த இடமே கூட்டமாக காட்சியளித்திருக்கிறது. இதனால் ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று அஞ்சிய காவலர்கள். அனுமதி இன்றி சட்டவிரோதமாக கூடியதாக கூறி, அவரது ரசிகர்கள் 7 பேரை கைது செய்துள்ளனர்.
ஆணையரை சந்திக்க வந்த சிம்பு அளித்த பேட்டியில், மன்சூர் அலிகான் பேசியது தவறெனில் அவரை போன்று பேசுபவர்கள் அதிகமானோர் இருக்கின்றனர். அவர்களையும் கைது செய்யுங்கள், என்றார். மேலும் மனிதனை மனிதனாக பாருங்கள். எனக்கு அரசியல் தெரியாது. நான் சிறப்பாக பதிலளிக்க இங்கு வரவில்லை, என்றெல்லாம் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.