Advertisment

ஹெல்மட் அணிந்தால் வெள்ளி நாணயம் - இன்ப அதிர்ச்சி கொடுத்த போலீசார்

nn

Advertisment

இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசும்தமிழக போக்குவரத்து காவல்துறையும் அடிக்கடி விழிப்புணர்வுகளையும், விளம்பரங்களையும் வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சாவூரில்இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த பெண்களுக்கு திடீரென போக்குவரத்து போலீசார் வெள்ளி நாணயங்களை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் தலைக்கவசத்துடன் வந்த பெண்களுக்கு வாழ்த்து கூறியதோடு தலைக்கவசம் அணிவதை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு வெள்ளி நாணயங்களை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

ஏற்கனவே முறையாக ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த போலீசார், இந்த மாதம் வெள்ளி நாணயத்தை பரிசளித்துள்ளனர். அடுத்த மாதம் தங்க நாணயம் பரிசளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது தான் இதில் பெரும் ஹைலைட்.

Thanjavur helmet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe