Advertisment

சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள்; வியப்பை கொடுத்த ரசிகரின் செயல்

Silk Smitha's Birthday; A fan's act that gave a surprise

Advertisment

ஈரோட்டில் நடிகை சில்க் ஸ்மிதாவின் 65 வது பிறந்தநாளையொட்டி அவரது தீவிர ரசிகர் ஒருவர் பெண்களுக்கு புடவை வழங்கி ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி கொண்டாடினர்.

ஈரோடு அகில்மேடு வீதியில் டீக்கடை நடத்தி வரும் குமார்.1980ம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்கள் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகரான இவர் ஆண்டுதோறும் சில்க் ஸ்மிதாவின் நினைவு நாள், பிறந்த நாளில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கியும், புத்தாடை வழங்கியும் கொண்டாடி வருகிறார். இதனை தொடர்ந்து இன்று சில்க் ஸ்மிதாவின் 65வது பிறந்தநாளையொட்டி ரசிகர் குமார் தனது கடையில் சில்க் ஸ்மிதாவின் படத்தினை மலர்களால் அலங்கரித்து கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

இதனைத்தொடர்ந்து சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளையொட்டி பெண்களுக்கு புடவைகள் வழங்கியும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கியும் கொண்டாடினர்.கடந்த 21 ஆண்டுகளாக செய்து வருவதாகவும் நடிகை சில்க் ஸ்மிதா மனிதநேயம் மிக்கவர் அவரை போன்று இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பணியைச் செய்து வருவதாக தெரிவித்தார்.முன்னதாக சில்க் ஸ்மிதா புகைப்படம் இடம்பெற்ற 2025 ம் ஆண்டுக்கான காலண்டரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார்.

Erode birthday
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe