
தஞ்சாவூரில் எட்டு ஆண்டுகளுக்கு முன் இறந்த தந்தையை சிலையாக வடிவமைத்து, உடன்பிறந்த தங்கைக்குநெகிழ்ச்சியைஏற்படுத்தியுள்ளனர் சகோதரிகள்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைசேர்ந்தவர் செல்வம். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்த நிலையில்,இரண்டு பெண் குழந்தைகளுக்கு சீரும்சிறப்புமாக திருமணம் செய்து வைத்தார் செல்வம். இந்நிலையில் கடந்த2012-ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக உடல்நலக் குறைவால் செல்வம்இறந்துவிட்டார்.இந்நிலையில் கடைசி மகளானலட்சுமி பிரபாவுக்குதிருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.தனதுசகோதரிகள் இரண்டு பேரின்திருமணத்தை அப்பா முன்னின்று நடத்திய நிலையில், தன்னுடையதிருமணத்தில் அப்பா இல்லையே எனதனதுசகோதரிகளிடம் தனதுவருத்தத்தைதெரிவித்துள்ளார் லட்சுமி பிரபா.

உடன்பிறந்த தங்கையின்இந்த மனவருத்தத்தை முழுமையாக சரிசெய்யமுடியாதுஎன்றாலும், நம்மால் முடிந்ததை செய்யலாம் என முடிவெடுத்த லட்சுமி பிரபாவின்சகோதரிகள், 6 லட்சம் ரூபாய் செலவு செய்து சிலிகான்மெட்டிரியலில் தந்தைசெல்வத்தின் தத்ரூபசிலையைச் செய்து கொண்டுவந்து மணமேடையில் வைத்து, மணமகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தனர்.
அப்பா அருகில் இல்லையேஎனஏங்கியமணப்பெண்ணின் மனக்கவலையைப் போக்கும் விதத்தில், தந்தையின்தத்ரூபசிலைஅருகில் தாயையும் நிற்கவைத்துமணமக்கள், மாலை மாற்றி திருமணம் செய்து, காலில்விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)