Advertisment

போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி!

Silent tribute by carrying candles to the farmers who lost their lives in the struggle!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டக் களத்தில் உயிர் நீத்த விவசாய போராளிகளுக்கு மரியாதையை செலுத்தும் விதமாகவும், அனைத்து தொழிற்சங்கம் மற்றும் பல்வேறு கட்சியினர் ஒன்றுகூடி மன்னார்குடியில் மவுன பேரணி நடத்தி அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர், சமூக ஆர்வளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்திலும் தொடர்ந்து போராட்டம் நடந்துவருகிறது. அந்ந வகையில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் அதற்காக டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், டெல்லி போராட்டக் களத்தில் உயிர் இழந்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தியும் மன்னார்குடி பேருந்து நிலையத்தின் முன்பு பல்வேறு தரப்பினர் மவுன அஞ்சலி செலுத்தினர்.

farmers bill Mannargudi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe