தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடந்து வந்தது. போராட்டத்தின் 100வது நாள் அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடந்தது. கடந்த மே 22ஆம் தேதி நடந்த பேணியின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நெல்லையில் மௌன ஊர்வலம் நடந்தது. கூட்டக்குளி கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் ஊரை சுற்றி மௌன ஊர்வலம் நடத்தினர்.