Advertisment

கலைஞருக்கு மவுன அஞ்சலி ஊர்வலம்!  ஆளும் கட்சி முதல் அனைத்து கட்சிகளும்  பங்கேற்பு!

d

Advertisment

கடந்த 7 ம்தேதி திராவிட முன்னேற்ற கழகத் தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் உடல் நலம் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் காலமானார்.

அந்த மறைவையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிழக்கு மேற்கு மாவட்டத்தை சேர்ந்த திமுகவினர் சார்பில் கலைஞருக்கு மவுன அஞ்சலி ஊர்வலம் திண்டுக்கல் மாநகரில் நடைபெற்றது.

d

Advertisment

இந்த மவுன அஞ்சலி ஊர்வலத்தை கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார். இந்த மவுன ஊர்வலத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த திண்டுக்கல் பகுதி செயலாளர்களான மோகன், சுப்பிரமணி, சேசு உள்பட சில ர.ர.க்களும் கலந்து கொண்டர். அதுபோல் தே.மு.தி.க. மற்றும் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

d

இந்த மவுன அஞ்சலி ஊர்வலம் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் தொடங்கி நாகல் நகர், சோலையஹால் தியேட்டர், பயர்சர்வீஸ், கடைவீதி, பழனிரோடு வழியாக கலைஞர் மாளிகை வந்து அடைந்தது. இதில் இரண்டு மாவட்டங்களிலிருந்து திமுக பொறுப்பாளர்களும் தொண்டர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். அதுபோல் ஆளும் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியினருடன் பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் என மூன்றாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த மவுன அஞ்சலி ஊர்வலத்தில் கலந்து கொண்டு திண்டுக்கல் மாகநகரையே ஸ்தம்பிக்க வைத்து விட்டனர்.

i periyasamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe