தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்(வயது90) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
நாமக்கல் மாவட்டம் விதியாம்பாளையம் பகுதியை பூர்வீகமாக கொண்டவர் சிலம்பொலி செல்லப்பன். சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கியத்தேன் உள்பட பல நூல்களை எழுதியவர் செல்லப்பன். உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநாக இருந்தவர் செல்லப்பன்.
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற செல்லப்பன் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி சென்னை அடையாறில் உள்ள வீட்டில் உயிரிழந்தார்.