Advertisment

நாகையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

sikkal singaravelar temple festival local holiday

Advertisment

சிக்கல் சிங்காரவேலர் ஆலய குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதால் நாகை வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.

சிக்கல் சிங்காரவேலர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் வட்டத்திற்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு வேலை நாள் ஆகும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 18 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

holiday Nagapattinam temple
இதையும் படியுங்கள்
Subscribe