Advertisment

வேளாண் சட்டத்தை திரும்ப பெற ரிஷிவந்தியம் தொகுதியில் காங்கிரஸ் நடத்திய கையெழுத்து இயக்கம்!

Signature movement by Congress in Rishivandiyam constituency to withdraw agricultural law!

காங்கிரஸ் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தைத் திரும்ப பெற கோரி நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்திவருகின்றனர். அந்த வகையில், நேற்று மாலை 5 மணியளவில் ரிஷிவந்தியம் தொகுதியில் கையெழுத்து இயக்கத்தை கள்ளக்குறிச்சி காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சின்னசேலத்தார் ஜெய்கணேஷ் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

Advertisment

இந்நிகழ்ச்சியில், ரிஷிவந்தியம் வடக்கு வட்டார தலைவர் கிருபானந்தன், தெற்கு வட்டார தலைவர் பன்னீர்செல்வம், மத்திய வட்டார தலைவர் ஏழுமலை, மாவட்ட துணைத்தலைவர் அப்பாராசு, மாவட்ட செயலாளர் வேல்முருகன், அமைப்புசாரா வட்டாரத் தலைவர் சிவலிங்கம், ஆகியோர் முன்னிலையில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் கார்த்தி, தியாகதுருகம் அர்சத் சையத், நிர்வாகிகள் பெரியசாமி, ரவி, சுந்தரமூர்த்தி, கோவிந்தன், உள்ளிட்ட காங்கிரஸ் பேரியக்க தோழர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ரிஷிவந்தியம் பேரூர் நகர தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி உரையாற்றினார்.

Advertisment

congress farmers bill
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe