கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அனைத்து துறைகளிலும் முக்கிய நகரமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒரே பீங்கான் தொழிற்பேட்டை மற்றும் பீங்கான் தொழில்நுட்ப கல்லூரி விருத்தாசலத்தில் உள்ளது. மேலும் கேரளா மற்றும் தென் மாவட்டங்களை சென்னையோடு இணைக்கும் முக்கிய ரயில்வே நிலைய சந்திப்பு, நான்கு தாலுக்கா விவசாயிகள் விளைபொருட்களை கொள்முதல் செய்யும் பெரிய அளவிலான ஒழுங்குமுறை விற்பனை கூடம், முந்திரி, வேர்க்கடலைகளுக்கான வேளாண் ஆராய்ச்சி நிலையம், மின் துறை, கல்வி துறை என மாவட்ட அளவிலான பல்வேறு துறை அலுவலகங்கள் என அனைத்தும் உள்ளதாலும், மாவட்டத்தின் கடைகோடி பகுதிகளான வேப்பூர், சிறுபாக்கம், மங்களூர், தொழுதூர், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், மங்கலம்பேட்டை போன்ற பகுதிகளிலிருந்து மாவட்ட தலைநகரான கடலூர் செல்ல அதிக நேரம் கடக்க வேண்டியுள்ளதாலும் இப்பகுதிகளின் மையப்பகுதியாக உள்ள விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisment

 signature movement to announce the Vriddhachalam as a new district

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களை ஐந்தாக பிரித்து விருத்தாசலத்தை மைய இடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் விருத்தாசலம் வழக்குறைஞர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற நுழைவாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்குறிஞர்கள் உடனடியாக விருத்தாசலம் மாவட்டம் அமைக்க கோரியும், விருத்தாசலம் கோட்டத்தை பிரிக்கக் கூடாது என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

 signature movement to announce the Vriddhachalam as a new district

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இதேபோல் விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நல்லூரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர்கள், விவசாய சங்கத்தினர், அனைத்து கட்சியினர், பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டு விருத்தாசலம், நெய்வேலி, திருமுட்டம், திட்டக்குடி, தொழுதூர், வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர் .