/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hc_28.jpg)
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் ‘நீட் விலக்கு - நம் இலக்கு’ என்ற தலைப்பில் 50 நாட்களில், 50 லட்சம் கையெழுத்திட்டு, குடியரசு தலைவரிடம் ஒப்படைக்கும் கையெழுத்து இயக்கத்தை திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த 21 ஆம் தேதி துவக்கி வைத்தார். இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முதல் நபராக கையெழுத்திட்டார்.
இந்த சூழலில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்படுவதாக கூறி நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என தேசிய மக்கள் கட்சி தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி என்பவர் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் இந்த முறையீட்டை தாமாக முன்வந்து விசாரிக்க மறுத்த நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, லஷ்மிநாராயணன் அடங்கிய அமர்வு திங்கள் கிழமை தலைமை நீதிபதி விசாரிக்கும் வழக்கமான விசாரணைஅமர்வில் முறையீடு செய்யுங்கள் என அறிவுறுத்தியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)