Advertisment

'இரத்தத்தில் கையெழுத்திட்டு முதல்வருக்கு அனுப்புவோம்' -விரிவுரையாளர்கள் அவசர கூட்டத்தில் முடிவு!

Sign in blood and send to Chief minister ' - Lecturers Emergency Meeting End!

அனைத்து தனியார் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிதற்காலிக விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில்ஆலோசனைக் கூட்டம்நடைபெற்றது. திருச்சியில் நடந்த அவசர கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள மத்திய மண்டலம் மற்றும் தென்மண்டலத்தில் உள்ள 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்துசுமார் 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisment

இந்த கூட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் விரிவுரையாளர்கள் இரத்தத்தில் கையெழுத்திட்டு அந்த கோரிக்கை மனுவை தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்க உள்ளனர். இந்த கூட்டத்தில் முதல் கோரிக்கையாக கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரைவுரையாளர்களை உயர்கல்வித்துறை நிரந்தரபடுத்த உருவாக்கியுள்ள அரவாணையை முதல்வர் ரத்து செய்ய வேண்டும்.

Advertisment

இந்த கவுரவ விரைவுரையாளர்களில் பலர் அரசு விதிமுறைபடி முனைவர்படிப்போ, செட், நெட் உள்ளிட்ட தேர்வுகளில் பங்கேற்று, தேர்ச்சியும் பெற்று 1,28,630 பேர் காத்திருக்கும் நிலையில், கல்லூரிகளில் பணியாற்றக்கூடியவர்கள் தங்கள் உறவினர், நண்பர்கள் என்று ஒவ்வொருவருக்கும் பணிவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளதால், அரசின் விதிமுறையை பின்பற்றி படித்துமுடித்து காத்திருப்போரின் நிலை கேள்விகுறியாகி உள்ளது.

எனவே அரசு டி.ஆர்.பி தேர்வுமுறையை பின்பற்றி கல்லூரிகளில் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும், எங்களுடைய இந்த கோரிக்கையை முதல்வர் ஏற்க மறுத்தால் தமிழகம் முழுவதும் உள்ள தனியார், அரசு உதவி பெறும் கல்லூரி, பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரி தற்காலிக விரைவுரையாளர்களும், நெட், செட் தோ்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் வீட்டிலும் கருப்பு கொடி ஏந்தி தோ்தலை புறக்கணிப்போம். மேலும் இந்த அரசிற்கு எதிராக எங்களுடைய வாக்குகளை பதிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

விரைவில் நாங்கள் ஒன்றிணைந்து முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

edappadi pazhaniswamy Professor thiruchy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe