சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை பா.ம.கவினர்முற்றுகையிட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்திவருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் பல இடங்களில் 11-ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தினர் அறிவித்தபடி இன்று பா.ம.க வினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இதை தொடர்ந்து இன்று எழும்பூர் ரயில் நிலையத்தை அன்புமணி ராமதாஸ் தலைமையில்நூற்றுக்கணக்கான பா.ம.க தொண்டர்கள்முற்றுகையிட்டு போலீசாரின் தடுப்புகளை தாண்டி ரயில் நிலையத்தில் 4-வது பிளாட்பாமில் நின்ற எர்ணாகுளம் எஸ்பிரெஸ்ஸை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.ரயில் நிலையத்தின் வெளியேயும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கூடி போராட்டம் நடத்திவருகின்றனர். மேலும் தொண்டர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இறுதியில்அனைவரையும் கைது செய்தனர்.

Advertisment