sickle cut to the cashier who Mamul refused to give

கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் பகுதி திருச்சி- கரூர் மெயின் ரோட்டில், அரசு மதுபான கடை உள்ளது. இந்தக் கடை அருகே மது பான பார் உள்ளது. இந்தப் பாருக்கு முறையான அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. இந்த மதுபான பாரில் புதுக்கோட்டை மாவட்டம் சிங்கம்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் கேசியராக பணியாற்றி வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் இன்று மாலை தெற்கு மனத்தட்டையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன்கள் பிரதீப்(31), சேது(24) இருவரும் ஸ்ரீதர் பணியாற்றும் மதுபான பாருக்கு சென்றுள்ளனர். அங்கு ஸ்ரீதரிடம் இருவரும் மாமூல் கேட்டுள்ளனர். ஆனால் ஸ்ரீதர் மாமூல் தர மறுத்த நிலையில் பிரதீப் மற்றும் சேது இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஸ்ரீதரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் ஸ்ரீதர் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

Advertisment

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை காவல் ஆய்வாளர் பிரபாகர் காயமடைந்த ஸ்ரீதரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அங்கிருந்தும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கொலை வெறி தாக்குதலில்ஈடுபட்ட அண்ணன் தம்பிகளான பிரதீப், சேது ஆகிய இருவரையும் போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் மனைவியை கணவன் மது போதையில் சரமாரியாக வெட்டிவிட்டு, தானும் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் ,அடங்குவதற்குள், இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது குளித்தலை பகுதியில் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment