அதிமுக நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்திற்கு அதிமுக நிர்வாகி ரவி என்பவர் புகார் அளிக்கச் சென்றுள்ளார். அப்போது அவரை காவல் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தாக்கியுள்ளார். இது தொடர்பாகக் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து அதிமுக நிர்வாகி ரவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிலம்பரசனை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.