Skip to main content

இளம் பெண்ணை கர்பமாக்கிய உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்; கைது செய்யப்படுவோம் என தலைமறைவு...

Published on 02/09/2020 | Edited on 02/09/2020

 

Assistant investigator suspended for making naga young girl pregnant

 

 

நாகை மாவட்ட இளம்பெண்ணை காதலித்து, கர்ப்பமாக்கிய காவல்துறை உதவி ஆய்வாளர், பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாகியிருக்கும் எஸ். மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்துள்ள வில்லியநல்லூரை சேர்ந்த இளம்பெண் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் நிறுவனம் ஒன்றில் பனிபுரிந்துவருகிறார். இவருக்கும் தலைஞாயிறு ஓரடியாம்பலத்தை சேர்ந்த  உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் என்பவருக்கும் 2018 ம் ஆண்டு முகநூல் மூலம் அறிமுகம் ஏற்பட்டு. பிறகு காதலாக மாறி அதையும்தாண்டவே, கவிதா கர்ப்பமானார். 

 

இந்த செய்தி இரு வீட்டாருக்கும் தெரியவர, கர்ப்பவிவகாரத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள பல வழிகளை தேடிய விவேக் ரவிராஜ் , கவிதாவிடம் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்வோம் அதனால் கருவை கலைத்து விடு, இது வெளியில் தெரிந்தால் எனக்கு அசிங்கமாகிடும் என ஆரம்பத்தில் கெஞ்சியிருக்கிறார், பிறகு வற்புறுத்தி அடித்து துன்புறுத்தி மிரட்டியிருக்கிறார். கர்பத்தை கலைக்க அமைச்சர் ஒருவருக்கு வேண்டிய உள்ளூர் அதிமுக பிரமுகர்களையும் அனுப்பி மிரட்ட செய்தார்.

 

ஒருவழியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு மருத்துவர் மூலம் கருக்கலைப்பும் செய்யவைத்திருக்கிறார். அதன்பிறகு கவிதாவிடம் பேசுவதை சப்-இன்ஸ்பெக்டர் தவிர்த்து கண்டபடி திட்டி அசிங்கப்படுத்த, சந்தேகம் அடைந்த கவிதா தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சியுள்ளார். ஆனால் இறக்கமில்லாத விவேக் ரவிராஜ் இதை வெளியில் கூறினால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொன்று புதைத்து விடுவேன், இனிமேல் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

 

விவேக்ரவிராஜின் அதிரடி மிரட்டலால் மனமுடைந்த இளம்பெண் கவிதா தகுந்த ஆதாரங்களுடன் தன்னை காதலித்து கர்ப்பமாக்கி கைவிட்ட காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு நீதி வேண்டும் என கோரி நாகை டி.எஸ்.பி., எஸ்.பி., டி..ஜி. ஆகியோரிடம் புகார் அளித்தும் பலனின்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 

 

இதையடுத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய எஸ்.ஐ. மீதும், அவரது தாயார் மீதும் ஏழு பிரிவுகளின் கீழ் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட அதிரடியாக நாகை மாவட்டம் வலிவலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த விவேக்ரவிராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் ஐஜி ரூபேஷ்குமார்மீனா.

 

இந்த வழக்கில் தன்னை காவல் துறையினர் நிச்சயம்  கைது செய்துவிடுவார்கள் என்பதை அறிந்த சப் இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜ் தற்போது தலைமறைவாகிவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 புதுக்கோட்டை மாவட்டத்தில் 41 எஸ்.ஐ கள் பணியிடமாற்றம்!

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
41 sub inspector transfer in Pudukkottai district!

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் இந்தியா முழுவதும் தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி செய்து வரும் வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

ad

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியில் உள்ள காவல் உதவி ஆய்வாளர்கள் 41 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

Next Story

மது போதையில் அட்டகாசம்; ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் மனைவி மீது தாக்குதல்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Intoxicated youth beaten wife of retired sub-inspector

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழ் காங்கேயன் குப்பம் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி(61). இவர் காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் ஆக இருந்து ஓய்வு பெற்று, தற்போது இவர் அப்பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அய்யனார் கோவிலில் இரவு காவலராக பணி செய்து வருகிறார்.

 

இவர் கடந்த 11ஆம் தேதி இரவு அவரும் அவரது மனைவியும் வழக்கம் போல் கோவிலைப் பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தனர். அப்போது கோவில் மின்சார விளக்குகளை அணைத்த போது, கோயில் கருவறை பின்புறம் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ்,சதீஷ், தயாநிதி, துரை, ஆகியோர் காவலர் புகழேந்தியை தகாத வார்த்தைகளால் திட்டி எதற்கு கோவில் லைட்டை நிறுத்துகிறாய் நாங்கள் மது குடிப்பதற்கு வெளிச்சம் வேண்டும் என்று கூறியுள்ளனர்.

 

கோவிலுக்குள் இது போன்ற அருவருப்பான செயல்களை செய்யக்கூடாது என புகழேந்தியும் அவரது மனைவியும் கூறியுள்ளனர். அப்போது மேற்படி நால்வரும் அருவருப்பான வார்த்தைகளால் திட்டியபடி புகழேந்தியை தாக்கியுள்ளனர். இதைக் கண்டு பதறிப்போன அவரது மனைவி அவர்களிடம் இருந்து தனது கணவரை தடுத்து மீட்பதற்கு போராடி உள்ளார். அப்போது பெண் என்று பாராமல் அவரது சேலையையும் பிடித்து இழுத்து அவர் மீதும் தாக்குதல் தாக்கியுள்ளனர் அவர்களிடம் இருந்து இருவரும் தப்பி ஓடி முத்தாண்டி குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின் பேரில், காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், முத்தாண்டி குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சாந்தா ஆகியோர் வழக்கு பதிவு செய்து கோவில் காவலராக பணி செய்யும் புகழேந்தி மற்றும் அவரது மனைவியை தாக்கிய விமல்ராஜ் உட்பட நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்வதற்காக, தீவிரமாக தேடி வருகின்றனர்.