Advertisment

மின்சாரம் தாக்கி எஸ்.ஐ உயிரிழப்பு; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

SI lose their live due to electrocution; Chief Minister Relief Notice

Advertisment

பணியில் இருந்த காவல்துறை ஆய்வாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் இரவுப் பணியில் இருந்துள்ளார். அப்பொழுது இரும்பு கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் தாக்கி எஸ்.ஐ சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலைப் பார்த்து சரவணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழுத வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த எஸ்.ஐ மரணத்திற்கு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த சரவணனின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

electicity paramakudi police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe