Advertisment

காவல் நிலையம் எதிரே நிறுத்திய எஸ்.ஐ பைக் திருட்டு!

SI bike stolen from police station opposite

திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐயாக பணியில் இருப்பவர் செல்வகுமார். இவர் நேற்று முன் தினம் இரவு பணிக்கு வந்தபோது, பைக்கை காவல் நிலையத்தின் எதிரே வழக்கம் போல் நிறுத்திவிட்டு இரவு ஒன்பது மணிக்கு பணிக்குச் சென்றுள்ளார்.

Advertisment

அதன் பின் நேற்று (20.07.2021) காலை பணி முடிந்து வந்து பார்த்தபோது அவரது பைக்கை காணவில்லை. இதுகுறித்து எஸ்.ஐ செல்வகுமார் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisment

police bike theft
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe