Advertisment

பிக்பாஸ் -2 ல் இருந்து சாரிக் ஹசன் வெளியேற்றப்பட்டார்

sha

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ்-2ல் இருந்து சாரிக் ஹசன் வெளியேற்றப்பட்டார்.

Advertisment

ரியாஸ்கான் - உமா தம்பதியின் மூத்த மகன் சாரிக் ஹசன், ஆரம்பத்தில் நிகழ்ச்சியில் இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்தது. ஆனால், இப்போது அவரின் நடவடிக்கைகள் கொஞ்சம் அத்துமீறலாக இருக்கிறது என்று மக்கள் வாக்களித்ததன் அடிப்படையில் அவர் இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Advertisment

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக சர்வாதிகார ஆட்சி என்ற டாஸ்க் நடைபெற்றது. இதில் இந்த வார வீட்டின் தலைவி ஐஸ்வர்யாதத்தா ராணியாக இருந்தார். இவருக்கு ஆலோசகராக ஜனனி மற்றும் பாதுகாவலராக டேனியல் இருந்தனர். சர்வாதிகாரி என்றதும் பிக்பாஸ் வீட்டில் இருப்போரிடம் இதுவரை தனக்கு இருந்த விரோதம் அனைத்தையும் இந்த டாஸ்க் மூலம் தீர்த்துக்கொண்டார். இதனால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டார். அவர்தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று எல்லோரும் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால், அவர் வெளியேற்றப்படாததற்கான காரணம்..... பிக்பாஸ் -2 ஆரம்பத்தில் இருந்து நிகழ்ச்சிக்கு போதிய வரவேற்பு பெறவில்லை. இதனால் டிஆர்பி ரேட்டிங் குறைந்துகொண்டே போனது. இதனை நிவர்த்தி செய்யத்தான் சர்வாதிகாரி டாஸ்க்கை வைத்தார்கள். அது சரியாக சென்று ரேட்டிங் அதிகமாகிவிட்டதால் ஐஸ்வர்யாதத்தா வெளியேற்றப்படவில்லை.

ஐஸ்வர்யாதத்தாவின் டாஸ்க்கினால் ஏகப்பட்ட அரசியலும் விமர்சனங்களூம் எழுந்தன. பெங்காலியான ஐஸ்வர்யாதத்தாவின் ஆபாச வீடியோ என்று சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரல் ஆகிவருகிறது.

சர்வாதிகாரி டாஸ்க்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும் மறைமுகமாக சாடியதால் இது குறித்து வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

sharik Biggboss
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe