Advertisment

"விளையாட்டின் மீதான லட்சியத்தைக் காட்டுகிறது"- மேக்னஸ் கார்ல்சன் பேட்டி!

publive-image

குறுகிய கால இடைவெளியில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்தும் தமிழகத்தை நினைத்து மகிழ்ச்சி அடைவதாக, உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆங்கில நாளிதழ் ஒன்றிருக்கு பேட்டியளித்துள்ள மேக்னஸ் கார்ல்சனிடம், முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதால், இந்திய விளையாட்டில் முன்னேற்றம் காண்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

Advertisment

இதற்கு பதிலளித்த கார்ல்சன், "இந்திய விளையாட்டு துறையின் வளர்ச்சியைக் கண்டு தான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவும், குறிப்பாக, தமிழகமும் குறுகிய கால அவகாசத்தில் போட்டியை நடத்துவதைப் பார்க்கும் போது, விளையாட்டின் மீது நாடு கொண்டிருக்கும் லட்சியத்தையும், மரியாதையையும் காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

நார்வே நாட்டையைச் சேர்ந்த 31 வயதான மேக்னஸ் கார்ல்சன் ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chess
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe