சென்னையில் பல்வேறு பகுதிகளில் தற்பொழுது மழை பொழிந்து வருகிறது.

தமிழகத்தில் தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இரவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு என்று குறிப்பிட்டுள்ளது.

Showers in many parts of Chennai

Advertisment

Advertisment

இந்நிலையில் தற்போது அடையாறு, திருவான்மியூர், தேனாம்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், தியாகராய நகர், மேற்கு மாம்பலம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.

அதேபோல் கோடம்பாக்கம், மயிலாப்பூர், தரமணி, வேளச்சேரி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பொழிந்து வருகிறது. பெரம்பூர், புரசைவாக்கம், சௌகார்பேட்டை, மடிப்பாக்கம், மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் தற்போது மழை பொழிந்து வருகிறது.