thol.thirumavalavan

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக்கொடி காட்டுங்கள். வீடுதோறும் கறுப்புக்கொடி ஏற்றுங்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாதுகாப்புத்துறைத் தொடர்பான கண்காட்சியில் பங்கேற்பதற்காக ஏப்ரல் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். ஏற்கனவே திமுக தலைமையில் கூட்டப்பட்ட தோழமைக் கட்சிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பிரதமர் மோடி செல்லும் வழியெங்கும் கறுப்புக் கொடி ஏந்தி அறவழியில் நமது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

Advertisment

உச்சநீதிமன்றம் தெளிவாக அறிவித்த பிறகும் அது விதித்தக் கெடுவை மீறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்குத் தமிழக மக்களின் உணர்வுகளை எடுத்துக்காட்டும் விதமாக தமிழ்நாடு முழுவதும் இல்லங்கள் தோறும் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டுமெனவும் கறுப்பு உடையோ கறுப்பு பட்டையோ அணிய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.