Advertisment

''கோவில்களை அடைத்துவிட்டு படப்பிடிப்பிற்கு அனுமதிப்பதா?''- ஹெச்.ராஜா கண்டனம்!

'' Should temples be closed and filming allowed? '' - H. Raja condemned!

கரோனாவைகாரணம் காட்டி கோவில்களைஅடைத்துவிட்டுப்படப்பிடிப்புக்கு அனுமதி அளிப்பது ஏன் என்று பாஜகவின்ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழகம் முழுவதும் வார இறுதி நாட்களில் கோவில்கள் அடைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனைத்து நாட்களிலும்கோயில்களைப்பக்தர்கள் வழிபாட்டிற்குத் திறக்ககோரியும் தமிழகபாஜக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார் .அதன்படி பழனியில் பாத விநாயகர் கோவில் முன்பு பாஜக முன்னாள் தேசிய செயலாளர்ஹெச்.ராஜா. சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் அபிராமி ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

Advertisment

'' Should temples be closed and filming allowed? '' - H. Raja condemned!

இக்கூட்டத்தில் பேசியஹெச்.ராஜாவோ, ''இந்தியாவில் 93 கோடி பேர்கரோனாதடுப்பூசி செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவார்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்களிடம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.இந்தநிலையில்வழிபாட்டுத்தலங்களுக்கு மட்டும் திமுக அரசு தடை விதிக்கிறது. ஆனால்தியேட்டர்கள், மதுபானகடைகளைத்திறந்து வைப்பதன் மூலம் மக்களின் இறை நம்பிக்கையின் மீது திமுக விளையாடி வருகிறது. வார இறுதி நாட்கள் மட்டுமின்றி அமாவாசை போன்ற முக்கிய நாட்களிலும்கோயில்களுக்குச்செல்ல தடை விதிக்கப்படுகிறது. ராமேஸ்வரம் கடலில் நீராட அனுமதி மறுத்து வருகின்றனர். தனுஷ்கோடியில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து விட்டுசினிமாபடப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ளகோவில்களுக்குச்சொந்தமான நகைகளை உருக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். நகையை உருக்குவது மூலம் கொள்ளையடிப்பதற்கு வழிவகுக்கும். இதன்மூலம் கோயில் சொத்துகள் பறிபோகும்'' என்று கூறினார்.

இதில் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டுகோவிலைத்திறக்கக்கோரிகோஷங்கள்எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு டி.ஐ.ஜி. விஜயகுமாரி, திண்டுக்கல் எஸ்.பி சீனிவாசன் மற்றும் தேனிஎஸ்.பி.பிரவீன்தலைமையில் ஏராளமானபோலீசார்பாதுகாப்புப்பணியில் குவிக்கப்பட்டு இருந்ததால் பழனியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Dindigul district H Raja
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe