தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம்அமலில் உள்ளது. இதன் காரணமாக10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சில பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் சரியாக நடைபெறவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தநிலையில், சில பள்ளிகளில்காலாண்டு, அரையாண்டு தேர்வு பள்ளியில் நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை சேகரிக்க அல்லது இது தொடர்பாக பள்ளி மாணவர்களையோ அல்லது மாணவர்களின் பெற்றோர்களையோபள்ளிக்கு அழைக்கக்கூடாது தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.