Advertisment

கடைகள் திறப்பு... அல்லல்படும் மாவட்ட நிர்வாகம்...

kk

கள்ளக்குறிச்சி நகரத்தில் ஏராளமான கடைகள் நேற்று திறக்கப்பட்டு ஜரூராக வியாபாரம் நடந்தது. கடைகள் திறக்கப்பட்டதால் பொருட்களை வாங்க கள்ளக்குறிச்சிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஏராளமானோர் வருகை தந்தனர்.

Advertisment

இதனால், கூடிய கூடத்தைக்கட்டுப்படுத்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி ஆகியோர் தலைமையில் சப் கலெக்டர், தாசில்தார், டிஎஸ்பி, நகராட்சி ஆணையர், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட போலீசார்களுடன் தியாகதுருகம் சாலை, சேலம் மெயின் ரோடு, காந்தி ரோடு ஆகிய பகுதிகளில் அனுமதி மீறி திறக்கப்பட்ட கடைகளை மூட வலியுறுத்தி அல்லல்பட்டது மாவட்ட நிர்வாகம். எந்தெந்த கடைகள் திறக்கலாம் என்ற விபரத்தை முறையாக ஒரு நாட்களுக்கு முன்னரே அறிவித்திருந்தால் கள்ளக்குறிச்சியில் அதிகப்படியான கடைகள் திறக்கப்பட்டதை முன்னரே தடுத்திருக்கலாம் என்கின்றனர் வியாபாரிகள்.

Advertisment

shops kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe