Skip to main content

ஊரடங்கு விதிகளின்படி மூடப்பட்டிருந்த கடைகள் மற்றும் இதர இடங்கள்..! (படங்கள்)

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

 

இந்தியா முழுவதும் கரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிதீவிரமாக பரவி வருகிறது. டெல்லி, மகாராஷ்டிரா உத்திரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்திலும் கரோனாவின் பரவல் அதிகமாக இருக்கிற காரணத்தினால் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் மக்களின் அசாதரண போக்கும், நோய் தாக்கத்தின் பரவலும் அதிகரித்ததை அடுத்து தளர்வுகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டது.

 

அதன்படி திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், பெரிய வணிக வளாகங்கள், பார்கள், பெரிய கடைகள் ஆகியவை இயக்க அனுமதி இல்லை. மேலும் ஹோட்டல், தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மற்றும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் இன்று முதல் மக்கள் அதிகம் கூடும் சினிமா திரையரங்கங்கள், மால்கள், முடிதிருத்தம் அழகு நிலையங்கள், பெரிய கடைகள் போன்ற பகுதிகள் மறு தேதி அறிவிக்கும் வரை மூடப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதனையொட்டி சென்னையில் உள்ள மேற்கண்ட அனைத்தும் இன்று முதல் மூடப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கரோனா கட்டுப்பாடுகளுக்கு ஒத்தழைக்காத மக்கள்... வழக்குப் பதிவு செய்யும் காவல்துறை...

Published on 22/06/2021 | Edited on 22/06/2021
People who do not cooperate with corona controls ...

 

தமிழகத்தில் கரோனா வைரஸ் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த வரும் ஜூன் 28 -ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பல மாவட்டங்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலை ஏற்படுத்தும் வகையில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஈரோடு மாவட்டத்திலும் கட்டுப்பாடுகளை முழுமையாக முறையாக கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்திருந்தார்.

 

ஆனாலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் பலர் வழக்கம் போல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றித் திரிகின்றனர். 28-வது நாளான நேற்றும் மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 22 ந் தேதி  மட்டும் முகக்கவசம் அணியாமல் வந்த 217 பேருக்கு தலா ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டது. அதே போல் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காத 11 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டது. ஊரடங்கு தடையை மீறி வெளியே சுற்றியதாக 246 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

 

211 இருசக்கர வாகனங்களும், 8 நான்கு சக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். நேற்று மட்டும் ரூபாய் 1 லட்சத்து 99 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், சோதனை சாவடிகளில் இ-பதிவு இன்றி வரும் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதே போல் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களின் மோட்டார் சைக்கிளை போலீஸார் தடுத்து நிறுத்தி, ஹெல்மெட் அணிந்து வர வலியுறுத்தினர். 

 

 

Next Story

கரோனா வழிமுறைகளை பின்பற்றாத தனியார் மருத்துவமனை மற்றும் 20க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்!! 

Published on 10/06/2021 | Edited on 10/06/2021

 

Private hospital and more than 20 stores sealed for not following Corona instructions

 

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த ஒன்றரை மாத காலமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. அரசு மருத்துவமனைகளிலும், சிறப்பு சிகிச்சை மையங்கள் மூலமும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அதே சமயத்தில், உரிய கட்டமைப்பு வசதிகளுடன், அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சிகிச்சையளிக்க சில தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அரசின் வழிமுறைகளைப் பின்பற்றாமல் கரோனா நோயாளிகளுக்கு நாள்தோறும் சிகிச்சை கொடுத்துவந்ததாக கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார் வந்தது. அதனையடுத்து, 2 நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்குச் சென்ற அதிகாரிகள் தனியார் மருத்துவமனைக்குச் சென்று அதிக அளவில் கூட்டத்தைச் சேர்க்க வேண்டாம், அரசின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துவந்தனர். 

 

இந்நிலையில், இரண்டு நாட்களாக அதிக அளவில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுத்ததாக குற்றச்சாட்டு மேலும் எழுந்தது. அதையடுத்து, நேற்று (09.06.2021) மருத்துவத்துறை இணை இயக்குநர் ரமேஷ்பாபு, வட்டாட்சியர் பலராமன், காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகளும் போலீசாரும் அதிரடியாக சென்று, மருத்துவமனை தொற்று ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகவும், அரசின் வழிமுறைகளைப் பின்பற்றாததாலும் மருத்துவமனைக்குத் தற்காலிகமாக பூட்டுப் போட்டு பூட்டினர். இதனிடையே  14ஆம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், மொத்த விற்பனையில் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள், பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்களும், மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குவோர், தச்சர் போன்ற சுயதொழில் செய்வோர் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை பணிபுரியவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

 

Private hospital and more than 20 stores sealed for not following Corona instructions

 

அதேசமயம் விருத்தாச்சலம் பகுதியில் அரசு உத்தரவுகளை மீறி அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றுவந்தது. இதுகுறித்து அறிந்த விருத்தாச்சலம் வட்டாட்சியர் சிவக்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் மோகன் ஆகியோர் விதிகளை மீறி செயல்படும் கடைகளைக் கண்டறிந்து சீல் வைத்தனர். நேற்று முன்தினம் விருத்தாசலம் பகுதியில் 8 கடைகளுக்கு சீல் வைத்த நிலையில், நேற்று விருத்தாசலம் பங்களா தெருவில் அனுமதியின்றி திறக்கப்பட்டிருந்த ஃபேன்சி ஸ்டோருக்கு சீல் வைத்தனர். அப்போது ஃபேன்சி ஸ்டோர் உரிமையாளர் வட்டாட்சியரிடம், “என் கடைக்கு எப்படி சீல் வைக்கலாம்” என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் உள்ளிட்ட போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதேபோல்  பெண்ணாடம் பேரூராட்சியில் தேரடி வீதியில் உள்ள 2 ஜவுளிக்கடைகளில் துணிகள் விற்பனை நடந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த பெண்ணாடம் பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமி, பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் திறந்திருந்த 2 ஜவுளி கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். பின்னர் கடைவீதி பகுதியில் உத்தரவை மீறி திறந்திருந்த நகை அடகுக் கடை, கவரிங் கடை உள்ளிட்ட 18 கடைகளுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.