Skip to main content

அதிமுக வசமிருந்து திமுக வசம் வந்த வணிக வளாகக் கடைகள்!! 

Published on 23/02/2020 | Edited on 23/02/2020

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செம்பட்டியில் உள்ளது. திண்டுக்கல்-தேனி நெடுஞ்சாலை ஓரம் அலுவலகம் இருப்பதால், அலுவலகம் முன்பு ஊராட்சி ஒன்றிய நிதியை பெருக்குவதற்காக கடந்த முறை பதவி வகித்த உள்ளாட்சி பிரதிநிதிகள் வணிக வளாகத்திற்கு ஏற்பாடு செய்து, வளாகத்தை கட்டினர். 

 

Shopping complexes from ADMK to DMK

 

தரை தளத்தில் 10 கடைகளும், முதல் தளத்தில் 10 கடைகளும் சேர்த்து மொத்தம் 20 கடைகள் கட்டப்பட்டன. கடந்த 01.03.2016 அன்று ஏலம் விடப்பட்டு, அன்று முதல் 28.02.2019 வரை 3 வருடத்திற்கு ஏலம் விடப்பட்டது. அதிமுக மாவட்ட மீனவரணி இணைச் செயலாளர் வக்கம்பட்டி அந்தோணிக்கு முதல் கடையும், 3ம் நம்பர் கடையை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பி.வி.நடராஜனும், 5ம் நம்பர் கடையை ஆத்தூர் ஒன்றிய செயலாளர் பி.கே.நடராஜனும், 6ம் நம்பர் கடையை சித்தையன்கோட்டை நகர அதிமுக அவைத்தலைவர் மகன் ஏ.விஜயகுமாரும், 8ம் நம்பர் கடையை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மல்லையாபுரம் கிருஷ்ணன் மனைவி லீலாவதியும், 12ம் நம்பர் கடையை பித்தளைப்பட்டி பாலுவும், 13ம் நம்பர் கடையை பாறைப்பட்டி குணசேகரன் மனைவி ஜி.ருக்மணி உட்பட அதிமுகவினர் கடைகளை ஏலம் எடுத்திருந்தனர்.

கடந்த வருடம் தனி அலுவலர் மூலம் ஒரு வருடத்திற்கு ஏலம் நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் 30.11.2019 அன்று ஏலம் முடிவடைந்த நிலையில் புதிதாக வந்த ஒன்றியக்குழு நிர்வாகம் வணிக வளாக கடைகளை ஏலம் நடத்த முடிவு செய்தது. அதன் படி 21.02.2020 அன்று ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மாடியில் ஒன்றிய ஆணையாளர் சீத்தாராமன் தலைமையில் ஏலம் விடப்பட்டது. புதிய நிர்வாகம் முழுக்க முழுக்க திமுக வசம் இருந்ததால் அதிமுகவினர் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. முறையாக தினசரி நாளிதழ்களில் ஏலம் சம்மந்தமாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஏலம் நடந்ததால் திண்டுக்கல் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த தகுதியுள்ள நபர்கள் 28 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். 

ஏலம் நடைபெறும் இடத்தில் ஏலத்தை நடத்தவிடாமல் கடைகளை உள்வாடகைக்கு எடுத்தவர்கள் தகராறு செய்ய திட்டமிட்டுள்ளதை தெரிந்து கொண்ட அதிகாரிகள், முறையாக வரைவோலை எடுத்தவர்கள் மட்டும் அனுமதித்தனர். இதனால் ஏலம் அமைதியாக நடைபெற்றது. ஏலத்தின் போது கடைகள் ஒன்றுக்கு வாடகையில் 15 சதவீதம் கூடுதலாக வைத்து ஏலம் விடப்பட்டது. 

இதுகுறித்து ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் எம்.மகேஸ்வரி முருகேசன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் கூறுகையில், கடந்த முறையை பின்பற்றிதான் இம்முறையும் ஏலம் விட்டுள்ளோம். கடந்த முறையைவிட இம்முறை கடை ஒன்றுக்கு 15 சதவீதம் கூடுதலாக வைத்துதான் ஏலம் விட்டுள்ளோம். இதன் மூலம் வருடத்திற்கு ரூ.1 லட்சம் வரை அதிக வருவாய் கிடைக்கும் என்றார். கடந்த முறை ஏலம் எடுத்தவர்கள் உள்வாடகைக்கு கடைகளை விட்டிருந்ததால் அவர்களை சரிக்கட்ட முடியாமல் முன்பு ஏலம் எடுத்தவர்கள் பிரச்சனையை தூண்டி விடுகிறார்கள் என்றார். ஆட்சி முடிந்தவுடன் காட்சி மாறும் என்பது போல் கடந்த முறை வணிக வளாகம் முழுவதும் அதிமுக வசம் இருந்தது. இம்முறை திமுக வசம் வந்துவிட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.