Shopkeeper absconding after refusing to provide food; The shop was sealed

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாக கூறி பெட்டிகடையில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுத்தது தொடர்பாக அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் எனும் கிராமத்தில் பள்ளிக்கு சென்ற பட்டியலின மாணவர்கள் அந்த ஊரில் இருக்கும் பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்க சென்றபோது அந்த கடையில் இருந்தவர் அவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.

Advertisment

அந்த வீடியோ பதிவில், “போங்க போய் உங்க வீட்ல போய் சொல்லுங்க. தின்பண்டம் கொடுக்க மாட்டேங்கிறாங்கன்னு. தின்பண்டம் கொடுக்க மாட்டாங்க டா. ஊர்ல கட்டுப்பாடு வந்துருக்கு. ஊர்ல ஒரு கூட்டம் போட்டு பேசி இருக்கு உங்க தெருல யாருக்கும் எதுவும் கொடுக்க கூடாதுனு சொல்லி. இனிமே இங்க யாரும் வந்து தின்பண்டம் வாங்க வேண்டாம். போங்க” என அந்த கடைக்காரர் பேசி இருந்தார்.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணைசெய்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் தான் இந்த பிரச்சனைகளுக்கு பின்னணிகாரணம் என சொல்லப்படுகிறது. இந்த கிரிக்கெட் போட்டியின் ஏற்பட்ட பிரச்சனையின்போது சாதியை சொல்லி ஒரு பிரிவினர் திட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும் பட்டியலின மக்களை தக்கியதாக 4 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில்வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisment

இதனை தொடர்ந்து தற்போது வெளியான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்துஅந்த கிராமத்திற்கு விரைந்த கோட்டாட்சியர் அந்த கடைக்கு சீல் வைத்தார். மேலும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் உறுதி அளித்தார். கடையின் உரிமையாளரான மகேந்திரன் என்பவர் நேற்றில் இருந்து தலைமறைவான நிலையில் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.