/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1287.jpg)
சென்னையில் 4 வயது சிறுமி முதல் 17 வயது சிறுமி வரை 5 சிறுமிகளைப்பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்களும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, டி.பி.சத்திரம், ஆர்.வி. நகர் 1-வது தெரு பகுதியில் மாரியம்மன் கூல் பார் என்ற பெயரில் பெட்டி கடை நடத்தி வருபவர் பெருமாள். இவரது கடையில் குட்கா பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக டி.பி.சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அவரின் கடையை போலீஸார் சோதனை செய்தனர். அச்சோதனையில், கடையில் 30 கிலோ குட்கா பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், பெருமாளை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் குட்காவை எங்கிருந்து வாங்குகிறார் என்பதை தெரிந்து கொள்ள செல்போனை கேட்ட பொழுது அதனை தரமறுத்ததால் போலீசாருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டு செல்போனை ஆய்வு செய்த பொழுது அதிர்ச்சி காத்திருந்தது. அதில், பெருமாள் சிறுமிகள் பலருக்கு பாலியியல் துன்புறுத்தல் செய்து அதனை வீடியோவாக பதிவுசெய்து வைத்து இருந்தார்.
சிறுமிகளின் வீடியோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், அது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல ஆணையத்திற்கு தகவல் அளித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளை மீட்டு அவர்களிடம் அது குறித்து கேட்ட பொழுது மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.
கீழ்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவரது தாய்க்கு தெரிந்தே இந்த பாலியியல் கொடுமைகள் நடந்துள்ளதும், அச்சிறுமியின் தாய் பெருமாளுடன் கடந்த 2 வருடமாக திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததும், பின்னர் காலப்போக்கில் அவரது சகோதரியுடனும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தால் 9 வயது மகளையும் பெருமாள் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் தாய், பெருமாளுடனான தவறானத்தொடர்பை துண்டிக்க முடியாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது மகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை அனுமதித்துள்ளார். பெருமாளின் பாலியல் சீண்டல்கள் எல்லை மீறி சிறுமியின் வீட்டுக்கு வரும் சிறுமியின் தோழிகளான 11 வயது மற்றும் 4 வயது சிறுமிகளையும் துன்புறுத்தல் செய்து வந்துள்ளான். இத்தனை கொடுமைகளும் பெருமாளுடன் தொடர்பில் இருந்த சகோதரிகள் வீட்டில் நடந்துள்ளது.
இதன் பிறகு போலீஸ் விசாரணையில் அந்த நபருடன் தொடர்பில் இருந்த பெண்ணின் 9 வயது மகள் மற்றும் அயனாவரம் மார்கெட் அருகில் பூ வியாபாரம் செய்பவரின் 4 வயது சிறுமி முதல் 17 வயது சிறுமி வரை 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மேலும் சிறுமிகளை பாலியியல் கொடுமை செய்வதற்கு 500 முதல் 2 ஆயிரம் வரையிலும் பணம் கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக பெருமாள் உட்பட மூவர் மீது போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம், பாலியல் தொல்லைஉள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பெருமாள் சைதாப்பேட்டை சிறையிலும், அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்கள் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)