
சென்னையில் பட்டப்பகலில் குளிர்பானக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற வடமாநில இளைஞர் ஒருவரை பொதுமக்கள் கூட்டாகச் சேர்ந்து தாக்கும் வீடியோ காட்சிசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை மாதவரம் தபால்பெட்டி பகுதியில் மேரி என்பவருக்கு சொந்தமான குளிர்பானக் கடை உள்ளது. இன்று அந்தக் கடையில் வடமாநில இளைஞர் ஒருவர் பூட்டை உடைக்க முயன்றுள்ளார். பட்டப்பகலில் இளைஞர் பூட்டை உடைத்துக் கொண்டிருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் இளைஞரை கையும் களவுமாகப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். உடனடியாக மாதவரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வடமாநில இளைஞரை பொதுமக்களிடமிருந்து மீட்டு விசாரணை செய்தனர்.
விசாரணையில் அந்த இளைஞர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுப்பானந்த் என்பது தெரியவந்தது. தொடர்ந்து இளைஞரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநில இளைஞர் தாக்கப்படும் இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Follow Us