/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a4780.jpg)
சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் வழக்கறிஞர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த மீனாம்பாள் தெருவில் தியாகராஜர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞர் ஆவார். வழக்கம்போல் வழக்கறிஞர் தனதுமனைவி, மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்பொழுது திடீரென வீட்டுக்குள் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. அப்போது ஜன்னல் வழியாக வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் அந்த பகுதியில் இருந்து ஓடிச் சென்றது தெரிந்தது.
வீட்டிற்குள் துப்பாக்கி குண்டு ஒன்று விழுந்து கிடந்தது. அந்த குண்டை பார்த்து அவர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றிருக்கலாம் என அச்சமடைந்து உடனடியாக தாம்பரம் காவல் நிலையத்திற்குத்தகவல் கொடுத்தனர். தகவல் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், வீட்டுக்குள் ஜன்னலை துளைத்து உள்ளே வந்த துப்பாக்கி குண்டை கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆய்வில் அது சிறிய ரக துப்பாக்கியில் இருந்த வந்த குண்டு எனத்தெரியவந்துள்ளது.
தொடர்ந்து வழக்கறிஞர் வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். துப்பாக்கியால் சுட்ட அந்த மர்ம நபர் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வழக்கறிஞர் என்பதால் வழக்குகள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் இவ்வாறு நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)