Advertisment

யூடியூப் தலைமை அலுவலத்தில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின்கலிபோர்னியாவில், நேற்று யூடியூப்தலைமை அலுவகத்திற்கு, அந்த நாட்டின் நேரப்படி பிற்பகல்12.30 மணிக்குஇளம்பெண் ஒருவர்வந்தார். அலுவகத்திக்குள் வந்த அந்த பெண் எதிர்பாராத விதமாக மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியால் கண்ணில் பட்டவர்களைஎல்லாம் கண்மூடித்தனமாகசுட்டார். இதனால் 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலுவகத்தில்அங்கும் இங்குமாக ஓடினர். மேலும் இந்த எதிர்பாராத துப்பாக்கிச்சூட்டால் நான்கு பேர் குண்டடிப்பட்டனர்.

Advertisment

youtube

சம்பவத்தை அறிந்து விரைந்தசான்புரூனோ காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்ணை கைதுசெய்ய முற்பட்டபோது, அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டாள்.

Advertisment

youtube

இதைத்தொடர்ந்து முதல் கட்ட விசாரணையில்அந்த பெண்ணின் பெயர் நாசிம் அக்தம் என தெரியவந்துள்ளது. ஆனால் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்று விசாரணைநடத்தியதில் அந்த பெண்வேகனிசம்,பெர்சியன் கலாச்சாரம் பற்றிய யூட்யூப் சேனல் நடத்திவந்ததாகவும், அதை கூகுள் முடக்கி பார்வையாளர்கள் எண்ணிக்கையை குறைக்க முற்பட்டகாகவும்,அதனால் ஆத்திரமடைந்தே அந்த பெண் துப்பாக்கி சூடில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. குண்டடிபட்ட நால்வரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

google GunShot police Youtube
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe