காவல்துறை உயரதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்

Shooting Competition for Police Officers; Medal for winners

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் இரண்டாவது இடம் பிடித்தார். இன்று (14.06.2023) தமிழக காவல்துறையில்பணியாற்றும் காவல்துறை தலைவர்கள் மற்றும்உயர் அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடுதல் போட்டி சென்னை மருதம் கமாண்டோ துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில்நடைபெற்றது.

இந்த போட்டியில் கலந்து கொண்ட மத்திய மண்டல காவல்துறைதலைவர் க.கார்த்திகேயன் ஐ.பி.எஸ், ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இரண்டாம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் இடம் பிடித்த தாம்பரம் மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் காவல்துறை கூடுதல் இயக்குநர் அ.அமல்ராஜ் ஐ.பி.எஸ் தங்கப்பதக்கத்தை வென்றார்.மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சுதாகர்ஐ.பி.எஸ் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திரபாபுஐ.பி.எஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கு சான்றிதழும் பதக்கமும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

police trichy
இதையும் படியுங்கள்
Subscribe