Advertisment

இளைஞரை கொலை செய்து தலையை தூக்கிச்சென்ற மர்ம நபர்கள்- சிவகங்கையில் பரபரப்பு

incident in manamadurai-excitement in Sivagangai

கோப்புப்படம்

Advertisment

சிவகங்கை அருகே இளைஞர் ஒருவரைவெட்டிக்கொலை செய்து தலையை தூக்கிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செங்கோட்டைபகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ராமன். நேற்று மாலை வெளியே சென்றராமன் வீட்டுக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அருகிலுள்ள கண்மாயில் தலையில்லாத நிலையில்இளைஞரின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

அந்தத்தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்திற்குச் சென்ற காவல்துறையினர் விசாரணை செய்தனர். அது காணாமல் போன ராமனின் உடலாக இருக்குமோ எனச் சந்தேகமடைந்த போலீசார் ராமனின்உறவினர்களை அழைத்து வந்து உடலைக் காட்டி விசாரித்ததில் அது ராமனின்உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட ராமனின் உடலை போலீசார் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். அவர் தலைப் பகுதியைக் காணாத நிலையில் கொலை செய்தவர்கள் எடுத்துச் சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ராமனின் தலை குறித்து டிஎஸ்பி கண்ணன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

sivakangai police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe