ADVERTISEMENT

“டோக்கனுக்கு தலைமைல இருந்து இன்னும் க்ளியர் ஆகல..”- அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ‘குரல்’ விளக்கம்!

10:17 PM Apr 18, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியின் சிட்டிங் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், வேட்பாளருமான மாணிக்கம் மீது பணப்பட்டுவாடா புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவானது. இந்நிலையில், அ.தி.மு.க. ஐ.டி. விங் நபர் ஒருவருடன் மாணிக்கம் எம்.எல்.ஏ. பேசியதாக ஆடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது.

அதில், அந்த நபர் ‘அழகாபுரில இருந்து, ஐ.டி. விங்க்ல இருந்து பேசுறேண்ணே.. இந்த டோக்கன் கொடுத்ததுக்கு ஆள் பூராவும் வந்து நிக்குது. சாமி கும்பிட வேண்டியது இருக்குது. எல்லாம் வந்து வீட்டுல நெருக்குறாங்க.’ என்று பதற்றத்துடன் பேச, எம்.எல்.ஏ. மாணிக்கம் குரலில் ‘டோக்கனுக்கு தலைமைல இருந்து இன்னும் க்ளியர் ஆகல தம்பி. அவங்க முடிவு தெரிஞ்சதும்தான் செய்வாங்க. ஏன் அவசரப்படுத்துறீங்க? நாமதான் ஜெயிக்கப் போறோம். ஜெயிச்சு வந்து பார்க்கிறோம்னு சொல்லியாச்சுல.’ என்று கூல் பண்ணுகிறது. அந்த நபரோ ‘அண்ணே 91 பெர்சன்ட் நம்மதுல வாக்குப்பதிவுண்ணே..’ என்று இடைமறிக்கிறார். எம்.எல்.ஏ. குரலோ ‘ஓட்டு போட்டிருக்காங்கள்ல. 100 பெர்சன்ட் நாம ரூபா வந்ததும் கொடுத்திருவோம். நாம ஜெயிச்சவுடனே, யாரு தந்தாலும், தரலன்னாலும் உங்கள வச்சிட்டு நாமளே கொடுத்திருவோம். அவங்க தரலன்னாலும் கொடுத்திருவேன்’ என்று சமாளிக்கிறது.

இதுகுறித்து, சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கத்தை தொடர்புகொண்டு கேட்டோம். அவர் கூறியதாவது, “ஆடியோ வந்ததுமே மறுப்பு சொல்லிட்டேன். அது நம்மது இல்ல. நான் உண்மையா தேர்தல் பணி செஞ்சிருக்கேன். அது நாம இல்ல. பணப்பட்டுவாடா கேஸ் இல்ல. ஆரத்திக்கு போட்டதா தி.மு.க. காரங்கதான் சொல்லிருக்காங்க. நம்மளுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்ல. அவங்க (தி.மு.க. தரப்பு) கேஸ் போடணும்னு சொல்லிருக்காங்க. போட்டிருக்கங்க. அப்புறம் வேட்டு போட்டோம்னு சொல்லிருக்காங்க. 10 மணிக்கு மேல வேட்டு போட்டத எல்லாம் நான் பார்த்துக்கிட்டிருக்க முடியுமா? அம்மாவுக்கு பயந்து தேர்தல் வேலை பார்த்திருக்கேன். ஆண்டவனுக்கு பயந்து ஓட்டு கேட்டிருக்கோம். ஆண்டவன் புண்ணியத்துல ஜெயிப்பேன். எதையும் எதிர்பார்க்காம எங்க மக்கள் ஓட்டு போட்டிருக்காங்க. எம்.எல்.ஏ. ஆகி தொண்டு செய்வேன்.” என்றும் ‘அது என் குரலல்ல’ எனவும் மறுத்துப் பேசினார் எம்.எல்.ஏ.

வாக்காளர்கள் ‘எதையும்’ எதிர்பார்க்காமல் வாக்களித்திருப்பதாகச் சொல்வதும், ‘தனது தேர்தல் பணியில் உண்மையும் நேர்மையும் மட்டுமே இருப்பதாக’ இறைபயத்தை வெளிப்படுத்துவதும், அசத்தலான அரசியலே!



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT