Advertisment

எடப்பாடி பழனிசாமி கார் மீது காலணி வீச்சு... எம்.எல்.ஏ. பாண்டியன் ஆர்ப்பாட்டம்! 

Shoes thrown at Edappadi Palanisamy's car ... MLA Pandian Demonstration!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளான நேற்று (05.12.2021), மெரினா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினார். அப்போது மர்ம நபர்கள் அவர் கார் மீது காலணியைத் தூக்கி வீசினர்.

Advertisment

இந்நிலையில், அதனைக் கண்டித்து சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் தலைமையில் இன்று சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ. அருள் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்த ஆர்ப்பாட்டத்தில், அச்சம்பவத்தைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன போன்றகோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

Chidambaram edappadi pazhaniswamy admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe