Shoes thrown at Edappadi car ... Ammk administrator arrested!

கடந்த 5 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளின் போது சென்னை மெரினா கடற்கரை சாலையில் சென்ற அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரின் வாகனங்களை மறித்து, அமமுகவினர் கற்கள், கட்டைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அதிமுக நிர்வாகி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

Advertisment

இச்சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி கார் மீது காலணி வீசியதாகதற்பொழுது அமுமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான திருவல்லிக்கேணியை சேர்ந்த மாரியப்பன் அமமுகவில் சேப்பாக்கம் வட்ட பொருளாளராக உள்ளார் என தெரியவந்துள்ளது.