Advertisment

அமைச்சர் காரின் மீது காலணி வீச்சு... மேலும் 3 பெண்கள் கைது!

 Shoes thrown at Minister car... 3 more women arrested!

Advertisment

ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்லட்சுமணனின்உடல் கடந்த 13 ஆம் தேதி மதுரை கொண்டுவரப்பட்டு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.அப்பொழுது விமான நிலையத்திற்கு வந்த உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்விற்கு வந்துவிட்டுதிரும்பிக் கொண்டிருந்த தமிழக நிதி அமைச்சர்பழனிவேல்தியாகராஜனின் கார்மீது பாஜக தொண்டர்கள் காலணி வீசியது பரபரப்பைஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பாஜக மதுரை மாவட்டதுணைத்தலைவர் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேர் இந்த வழக்குதொடர்பாககைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறுவிசாரணைக்குபிறகு பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த சரண்யா, தனலட்சுமி, தெய்வானை ஆகிய மூன்று பேரும் தற்பொழுது புதிதாக இந்த சம்பவம்தொடர்பாககைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

incident police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe