Advertisment

அர்ஜுன் சம்பத் கார் மீது காலணி வீச்சு; போலீசில் புகார்

Shoe thrown at Arjun Sampath's car; Police investigation

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கார் மீது காலணி வீசியதாக சென்னையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை ஏ.எஸ்.கே நகர் சாலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் காரில் சென்று கொண்டிருந்த பொழுது விசிக கட்சி கொடி பொருத்தப்பட்ட காரில் வந்த நபர் ஒருவர் அர்ஜுன் சம்பத் காரின் மீது காலணி வீசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

Shoe thrown at Arjun Sampath's car; Police investigation

அண்மையில் அம்பேத்கர் நினைவு நாளில் இந்து மக்கள் கட்சி சார்பில் அம்பேத்கருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டு திருநீறு இட்டுஒட்டப்பட்டிருந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில், அந்த போஸ்டர் உடனே அகற்றப்பட்டு, போஸ்டரை ஒட்டிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டிருந்தார். அந்த போஸ்டரில் அர்ஜுன் சம்பத்தின் படமும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

police Chennai car
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe