NN

Advertisment

கடந்த 15 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் பாஜக சார்பில் மரியாதை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முன்னாள் எம்பியும், பாஜக நிர்வாகியுமான சசிகலா புஷ்பா கலந்து கொண்டார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபொழுது பாஜக நிர்வாகி பொன்.பாலகணபதி என்பவர் சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும்வகையில் நடந்து கொண்டவீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானது. பொதுவெளியில் இப்படி நடந்து கொண்டது தொடர்பான அந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் பொன்.பாலகணபதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி ஆன்லைனில் புகார் அளித்துள்ளார்.