Advertisment

பாப் கட்டிங் வெட்டியதற்காக தற்கொலையா?-அதிர்ச்சி தரும் சிறார் தற்கொலைகள்!  

அண்மையில்சில நாட்களாகவே பள்ளி மாணவ மாணவிகள் சிறு சிறு காரணங்களுக்காக தற்கொலை முயற்சிகள் மேற்கொள்ளும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் சென்னை பாடியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு சிறுவன் ஒருவன்பள்ளியில் ஆசிரியர்கள் திட்டி, அடித்து துன்புறுத்துவதால் தற்கொலை செய்துகொள்வதாக ''ஹாய் காய்ஸ் நான் தற்கொலை பண்ணிக்க போறேன்'' என்று வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல் பெங்களூரில் ஐந்தாம் வகுப்பு சிறுமி ஷாப்பிங் அழைத்து செல்லாததால் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

இந்தநிலையில் கரூரில் பள்ளி மாணவி ஒருவர் பாப் கட்டிங் வெட்டியதற்காக தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலையில் பொடுகு இருப்பதாகக் கூறி கரூர் வெண்ணைமலைகோயில் பகுதியைச் சேர்ந்த மாணவியை பெற்றோர் அழகு நிலையத்திற்கு அழைத்து சென்று பாப் கட்டிங் செய்துள்ளனர். இதனால் மாணவி மன உளைச்சலில்இருந்ததாகக் கூறப்படுகின்ற நிலையில் அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிய நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

save live humanity Child Care
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe