Shocking in Satankulam case, 'Police threw blood-stained clothes in garbage'

Advertisment

கடந்த 2020 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம்சாத்தான்குளம் அரசடி தெருவை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ்(58), அவரது மகன் பென்னிக்ஸ்(31) ஆகியோரை, விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் கொடூரமாக தாக்கியதில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

2020 ஜூன் 20 ஆம் தேதி சிறையில் இருவரும் அடைக்கப்பட்ட நிலையில், ஜூன் 21 ஆம் தேதி மகன்பென்னிக்ஸ் உயிரிழந்துவிட, ஜூன் 23-ந்தேதி அதிகாலை தந்தை ஜெயராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். விசாரணைக் கைதிகளாக இருந்த தந்தை, மகன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முதற்கட்டமாக சிபிஐ சார்பில்2,027 பக்க குற்றப்பத்திரிகை தாக்கலான நிலையில், மேலும் 400 பக்கங்கள் கூடுதலாக கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை, மகனின் ரத்தம் படிந்த துணிகளை குப்பைத்தொட்டியில் போலீசார் வீசினர் என சிபிஐ தெரிவித்துள்ளதுஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.