/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a1769_0.jpg)
குழந்தைகளின் ஆபாசப் படங்களை பகிர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிக்னல் ஆப் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட மொபைல் செயலிகளில் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பரப்பிய நபர் குறித்து மேற்கு மண்டல போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனடிப்படையில் பெங்களூருவை சேர்ந்த பட்டதாரி இளைஞரானவங்கா ரகுநாத் ரெட்டி என்ற 24 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களை பார்ப்பது மற்றும் பரப்புவது குற்றம் என்ற நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)