ADVERTISEMENT

கண்டக்டர் மர்ம மரணம்: போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

11:15 AM Jan 24, 2022 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகிலுள்ள பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பஸ் கண்டக்டர் லோகநாதன்(40). இவர் கடந்த 20ஆம் தேதி மிட்டா மண்டகப்பட்டு பகுதியில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது மரணம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதன் எப்படி இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், அதே மிட்டா மண்டகப்பட்டு பேட்டை வீதியைச் சேர்ந்த முரளி, அவரது தந்தை செல்வராஜ் ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், உயிரிழந்த பஸ் கண்டக்டர் லோகநாதன் குடிபோதையில் கரும்பு சோலைகளுக்கு நடுவே மயங்கி படுத்துக்கிடந்தள்ளார். மளிகைச்சரக்கு லோடு ஏற்றிக் கொண்டு அந்த வழியாக முரளி அவரது தந்தை இருவரும் லாரியை ஓட்டி வந்தனர். அந்த லாரியைத் திருப்புவதற்காக லோகநாதன் படுத்துக்கிடந்தது தெரியாமல் பின்பக்கமாக இயக்கியுள்னர்.

அப்போது குடிபோதையில் கரும்பு சோலைகளுக்கு இடையே மயங்கிக் கிடந்த லோகநாதன் மீது லாரி ஏறியதில் லோகநாதன் உடலில் காயம் ஏற்பட்டு பரிதாபமாக இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. இதையடுத்து முரளி, அவர் தந்தை செல்வராஜ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களது சரக்கு லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர். பஸ் கண்டக்டர் லோகநாதன் மரணத்தில் இருந்த மர்மம் தற்போது விலகியுள்ளது. குடிபோதையில் ஒருவர் படுத்திருப்பது தெரியாமல் அவர் மீது லாரியை ஏற்றியதனால், லோகநாதன் இறந்து போன சம்பவம் கண்டமங்கலம் பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT